ஜூன் நடுப்பகுதியில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கும் வாய்ப்பு

அமைச்சரவை அங்கீகரித்த எரிபொருள் சூத்திரத்தின் பிரகாரம் மீண்டும் எரிபொருள்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழமையாக ஒவ்வொருமாதமும் 10ம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாகிய எரிபொருள் விலை மாற்றம், கடந்த மேமாதம் 24ம் திகதி அமைச்சரவை அங்கீகாரத்தில் உலக சந்தை விலைக்கமைய விலைச்சூத்திரத்தில் மாற்றத்தைக் கொண்டுவர இணங்கப்பட்டுள்ளது.

அதன்படி உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக ஜூன் மாத நடுப்பகுதியில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட வாய்ப்புக்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை இன்று சமகி ஐக்கிய தொழிற்சங்கத்தின் அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

அதேவேளை கடந்த மே 24ஆம் திகதி மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதும் இரண்டு வாரங்களில் எரிபொருள் விலையேற்றம் இடம்பெறும் என குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

உண்மையில் மே மாதம் 24ஆம் திகதி விலையில் திருத்தம் செய்வதற்காகவே புதிய எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கொடுத்திருந்தது.இருப்பினும் உலக சந்தை விலைக்கேற்ப மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு இடம்பெற வாய்ப்புக்கள் இருப்பதாக மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *