வெனிசுவேலாவும், அமெரிக்காவும் கைதிகள் பரிமாற்றம் செய்து கொண்டன.
போதைப்பொருட்களைக் கடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அமெரிக்காவின் சிறையில் பல வருடங்களைக் கழித்த இருவரை அமெரிக்கா விடுதலை செய்திருக்கிறது. அவர்கள் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலாஸ் மடூரோவின் மனைவியின் உறவினர்களாவர். அதற்குப் பதிலாக அமெரிக்காவைச் சேர்ந்த ஏழு பேரை வெனிசூவேலா விடுதலை செய்தது. அவர்களில் நால்வர் எண்ணேய் நிறுவனங்களின் உயர்மட்ட நிர்வாகிகளாகும்.
ரஷ்யாவின் எரிபொருட்களை வாங்குவதை நிறுத்திவிட்ட அமெரிக்கா பதிலாக வெனிசுவேலாவிடமிருந்து எரிநெய்யைக் கொள்வனவு செய்யும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. அதனால் அதுவரை முடக்கப்பட்டிருந்த வெனிசூவேலாவுடன் அரசியலில் மென்மையும் கடைப்பிடிக்கப்படுகிறது. வெனிசுவேலாவின் அண்டை நாடான கொலம்பியாவில் அரசியல் தலைமை இடதுசாரியாக மாறியதும் வெனிசுவேலாவுக்குச் சாதகமான நிலைமையை ஏற்படுத்தி வருகிறது.
“பல வருடங்களாகத் தவறான குற்றங்கள் சுமத்தப்பட்டு வெனிசுவேலாவின் சிறையிலிருந்தவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். விரைவில் அவர்கள் தமது குடும்பத்தினருடன் இணைவார்கள்,” என்று ஜோ பைடன் சனியன்று நடந்த அந்த விடுவிப்புச் செய்தியை வெளியிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்