பொன்னியின் செல்வன் – | கவிநடையாக
இரண்டாம்
பராந்தகனாகியச்
சுந்தரச்
சோழன் ..
அரிஞ்சயச்
சோழனின்
இரண்டாம்
மகன் ..
வானவன்
மாதேவியை
மாலைச்
சூடினான் ..
சோழ
நாட்டின்
சக்கரவர்த்தி
ஆயினான் ..
ஆதித்தக்
கரிகாலன்
குந்தவை
அருண்மொழிவர்மன்,
மூன்றுக்
கண்மணிகள்
சுந்தரரின்
நல்மணிகள் …
சுந்தரச்
சோழரின்
முதல்
முதல்வன்..
ஆதித்தக்
கரிகாலனெனும்
பட்டத்து
இளவரசன்..
மங்கலத்துச்
செப்பேடு
போற்றிடும்
நல்வீரன் ..
வந்தியத்
தேவனின்
ஆருயிர்
நண்பன் ..
நந்தினியின்
காதலில்
இளமையில்
வீழ்ந்தாய் .!
தங்கை
குந்தவையால்
காதலில்
நொடிந்தாய் .!
காஞ்சி
பொன்மாளிகை
உனக்கு
அணியன்றோ !
வஞ்சி
கொடியினைச்
சூடாப்
பிணியன்றோ !
அருண்மொழி
வர்மனே
பொன்னியின்
செல்வன் ..
பொன்னி
நதியிலே
மீண்ட
நாயகன் ..
சுந்தரச்
சோழரின்
மூன்றாம்
வாரிசு !
வானதியை
நேசித்தது
அருண்மொழியின்
மனசு !
முடிவுகள்
எடுப்பதில்
குந்தவையே
வல்லவள்..
வந்தியத்
தேவனைக்
காதலித்து
மணந்தவள் ..
பழையாறை
நகரிலே
வசித்து
வந்தவள் ..
செம்பியன்
மாதேவியோடு
வசித்து
உடனிருந்தவள்..
ஆதித்தக்
கரிகாலனின்
நிலைக்குக்
காரணமிவளே !
அருண்மொழிக்கு
வானதி
உரித்தாகக்
காரணமிவளே !
நந்தினியின்
சதிகளினை
நசித்திட
எண்ணினாள் ..
வேட்டைகளை
வேட்கையாய்
முடித்திட
நண்ணினாள் ..
வல்லத்து
வானர்
குலத்தின்
இளவரசன் ..
ஆதித்தக்
கரிகாலனின்
போர்க்கள
நண்பன் ..
குந்தவைப்
பிராட்டியின்
உயிர்க்
காதலன் ..
அருண்மொழி
வர்மனைக்
காத்திட்டக்
காவலன் ..
வந்தியத்தேவனின்றி
பொன்னியின்
செல்வனும்
உண்டோ .!
பாத்திரத்தின்
மேன்மை
கல்கியால்
கற்கண்டன்றோ .!
ஆதித்தக்
கரிகாலன்
கட்டளைக்கு
இணங்கினான் ..
அருண்மொழி
வர்மனின்
சொல்லுக்குள்
முடங்கினான் ..
குந்தவைப்
பிராட்டியின்
நல்லழகில்
மயங்கினான் ..
சூழ்ச்சியின்
உள்ளடக்கத்தை
உள்ளதுரைத்து
ஏங்கினான் ..
வரியினை
விதிப்பவர்
பெரிய
பழுவேட்டரையர்
கண்டன்
அமுதனாய்
நாட்டிலே
உலாவானவர் …
பழுவூர்
பகுதியைத்
தன்னிடமாகக்
கொண்டார் ..
விழுப்புண்கள்
அறுபத்து
நான்கினை
உடற்கொண்டார் ..
மதுராந்தகரை
ஆட்சியேற்க
ஆதரவினைத்
தந்தார் ..
அழகிலே
மயங்கியே
நந்தினியை
மணந்தார் ..
ஆதித்தக்
கரிகாலனைக்
கொன்றவரும்
இவரன்றோ !
தன்னைத்தானே
குத்திக்
கொண்டு
வீழ்ந்தவரன்றோ !
அழகும்
ஆபத்தும்
நிறைந்தவள்
நந்தினி
அரசியலை
நகர்த்தும்
எழிலான
கனலினி .!
ஆதித்தக்
கரிகாலனை
இளமையில்
விரும்பினாள் ..
சோதித்தக்
காலத்தில்
வீரபாண்டியனை
மணந்தாள் ..
ஆதித்தக்
கரிகாலனால்
பாண்டியனும்
வீழ்ந்தான் ..
நந்தினியை
மீண்டும்
பார்த்து
மனமிழந்தான் ..
பழி
வாங்கிட
நந்தினியும்
துடித்தாள் ..
பெரிய
பழுவேட்டரையரை
அழகினாள்
மணந்தாள் ..
சுந்தரரின்
வம்சத்தை
அழிக்க
நினைத்தாளே .!
அழகும்
ஆபத்தாகும்
என்று
உணர்த்தினாளே .!
காலந்தகக்
கண்டரே
சின்ன
பழுவேட்டரையர்
சிரித்துப்
பேசிடா
அண்ணனின்
வேட்டரையர் ..
தமையனின்
மோகத்தை
கடிந்து
உரைப்பார் ..
தமையனின்
மனையாளைப்
பார்வையாலே
முறைப்பார் ..
சுந்தரச்
சோழரின்
முதன்மை
அமைச்சர் .
அநிருத்த
பிரம்மராயர்
சோழரின்
நல்லமைச்சர்..
அனைத்தும்
அறிந்து
உதவிகளும்
செய்திட்டார் ..
சூழ்ச்சியைத்
தகர்த்திட
ஆலோசனைகள்
தந்திட்டார் ..
திருமலை
நாமத்தில்
திருமால்
பக்தன் .
ஆழ்வார்க்கடியான்
நம்பியாய்
வைணவப்
பக்தன் ..
சகோதரி
நந்தினியால்
நாட்டிற்குத்
தீங்குண்டு !
சகோதரன்
நம்பியால்
நாட்டிற்கு
நன்மையுண்டு !
அரிஞ்சய
சோழனின்
அண்ணன்
கண்டராதித்தன் ..
கண்டராதித்தன்
மனைவியே
செம்பியன்
மாதேவி
ஆலோசனைகள்
வழங்குவதில்
வல்லமை
தானுண்டு .!
மதுராந்தரின்
பேராசையைச்
சொற்களால்
கடிந்ததுண்டு .!
படகோட்டும்
பாய்மர
நங்கை
பூங்குழலி ..
உதவிகள்
செய்திடும்
மங்கையாய்
நல்லெழிலி ..
தியாக
விடங்கரின்
மகளும்
இவளே !
அருண்மொழி
மீதாசை
கொண்டவளும்
இவளே !
கொடும்பாளூர்
இளவரசி
குந்தவையின்
தோழி !
அருண்மொழி
வர்மனை
மணந்தாள்
வானதி
ஈழத்துப்
போரில்
தந்தையை
இழந்தவள் ..
திருமணம்
முடிந்தும்
இளவரசி
ஆகாதவள் ..
பூங்குழலியின்
அன்பின்
காதலன்
சேந்தனமுதன்
உத்தமச்
சோழனாய்
அரியணை
ஏறியவன் ..
கண்டராதித்தர்
செம்பியன்
மாதேவியின்
புதல்வன் ..
சோழ
நாட்டின்
முடிசூடும்
முதல்வன் ..
மதுராந்தகச்
சோழர்
வரலாற்றில்
ஒருவரே !
கல்கியும்
பாத்திரத்தை
இரண்டாகப்
பிரித்தாரே !
போலிக்காகப்
பழுவேட்டரையர்
கூட்டமும்
நடத்தினாரே !
சோழரின்
ஆட்சியினைச்
சீர்குலைக்க
நினைத்தாரே !
புதுவெள்ளம்,
சுழல்காற்று,
கொலைவாள்,
மணிமகுடம் ..
தியாகசிகரமென
பொன்னியின்
செல்வன்
ஐம்பாகங்களாகும் …
கதை,
திரைக்கதை,
வசனம்,
பாடல்கள்..
இசையோடு
பொன்னியின்
செல்வன்
திரைப்படமாகும் …
நாவலின்
கற்பனையைத்
திரைக்கதையாய்
வடித்திடலாம்..
நாவலின்
பாத்திரங்களைத்
திரையினில்
நடித்திடலாம் ..
ஐம்பத்தைந்து
பாத்திரங்களில்
முப்பத்தேழும்
முதலெனலாம் ..
முப்பத்தேழில்
பதினைந்தே
கல்கியின்
மூலதனமெனலாம் ..
அழியாக்
காவியமாய்
பொன்னியின்
செல்வன் …
திரையில்
விருந்தாய்
பொன்னியின்
செல்வன்…
எழுதுவது : முனைவர் இராமகுமார்,
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
விவேகானந்தா கல்லூரி,
கன்னியாகுமரி மாவட்டம்.