மனித உரிமை மீறல்களுக்கான வழக்குகளில் ஆஜராகும்படி கோட்டாபாயாவை அழைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.
தற்போது பதவியில் இல்லாததால் நாட்டின் ஜனாதிபதி என்ற சட்ட பாதுகாப்பு விலக்கப்பட்டதால் கோட்டாபாயா ராஜபக்சேவை 2011 இல் நடந்த மனித உரிமை மீறல் குற்ற வழக்குகளில் விசாரிக்க நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிடும்படி சிறீலங்காவின் உச்ச நீதிமன்றம் கேட்டிருக்கிறது. மனித உரிமைக்காகக் குரல்கொடுத்துவந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த லலித் வீரராஜ், குகன் முருகானந்தம் ஆகியோர் காணாமல் போய்விட்டது பற்றிய வழக்கில் சாட்சி சொல்ல கோட்டாபாயா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
12 வருடங்களுக்கு முன்னர் தனது சகோதரன் மஹிந்த ராஜபக்சேவின் ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சின் முக்கிய பொறுப்பிலிருந்த கோட்டாபாயா மனித உரிமைக்காகக் குரல்கொடுப்பவர்களை ஒழித்துக் கட்டியதாகப் பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. காணாமல் அப்படியான நபர்களை கோட்டாபாயா கடத்திச் சென்றுவிட்டதாகக் குற்றச்சாட்டப்பட்டதை அவர் மறுத்து வந்திருக்கிறார்.
2018 இல் அதுபற்றி விசாரிக்க வடக்கில் நீதிமன்றத்துக்குச் செல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டபோது அப்பிராந்தியத்தில் தனது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று கோட்டாபாயா மேன்முறையீடு செய்து தப்பிவிட்டார். அதையடுத்து அவர் ஜனாதிபதியாகியதால் அவரை விசாரிக்க இயலவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்