பலமான பாகிஸ்தான் அணியை சிம்பாவே வென்றது | T20 வெற்றிக்கிண்ணம்
T20 உலகக்கிண்ண இன்றைய இன்னுமொரு போட்டியில் சிம்பாவே அணி பாகிஸ்தானை ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றது. பலமான அணியாக என எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் அணியை அதிர்ச்சி வெற்றிகொண்ட சிம்பாவே அணியின் பக்கம் பலரின் பார்வை திரும்பியுள்ளது.
முன்னதாக நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாவே அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்ததுது.
அதன்படி துடுப்பெடுத்தாடிய சிம்பாவே இருபது ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை 130 ஓட்டங்களைப் பெற்றது.
இருபதுக்கு இருபது போட்டியில் இலகுவில் வெற்றிபெறக்கூடிய ஒரு இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடத் துவங்கிய பாகிஸ்தான் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.அது சிம்பாவே அணியை 1 ஓட்டத்தால் வெற்றிபெறச்செய்தது.
ஆட்ட நாயகனாக 25 ஓட்டங்களை மாத்திரமே கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றிய சிம்பாவே அணியின் சிகாண்டர் ராஷா அறிவிக்கப்பட்டார்.
அதன்படி புள்ளிப்பட்டியலில் மூன்றாமிடத்துக்கு சிம்பாவே முன்னேற பாகிஸ்தான் ஐந்தாமிடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டது.