கின்னஸ் சாதனைக்காக உலகத்தின் நீளமான பயணிகள் ரயிலைச் செலுத்தியது சுவிஸ் Rhaetian Railway.
தனது நாட்டின் தொழில் நுட்பத்திறமைகளை உலகறியச் செய்வதற்காக உலகின் நீளமான பயணிகள் ரயிலைச் செலுத்தியது சுவிஸ் ரயில் நிறுவனமான Swiss Rhaetian Railway. 100 பயணிகள் பெட்டிகளைக் கொண்ட 1.91 கிமீ நீளமான அந்த ரயில் சுவிஸ் ரயில் நிறுவனத்தின் 175 வது வருட நினைவு தினத்துக்காகச் சனிக்கிழமையன்று செலுத்தப்பட்டது.
பிரேடா – பெர்குன் நகரங்களுக்கு இடையே பயணிக்கும் அந்த ரயில் அல்புலா – பெர்னினா பாதை என்று அழைக்கப்படுகிறது. 46 பாலங்கள், 22 ரயில்வே சுரங்கவழிகளுக்கு ஊடாகப் பயணிக்கும் அப்பாதை 2008 ம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பால் சர்வதேசப் பாரம்பரியங்களில் ஒன்று என்று அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. மலை நாடான சுவிஸ்ரலாந்தின் அல்ப்ஸ் மலைகள், பள்ளத்தாக்குகளின் ஊடாகப் போகும் அல்புலா – பெர்னினா பாதை சர்வதேசச் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானது.
சுவிஸ் ரயில் நிறுவனத்தின் அந்தக் கொண்டாட்டத்தையும் சாதனையையும் கண்டு கழிக்க வழியெங்கும் பல்லாயிரக்கணக்கானோர் காத்திருந்து கையசைத்து மகிழ்ந்தார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்