நூலிழையில் வென்ற அவுஸ்ரேலியா | போராடித்தோற்ற ஆப்கானிஸ்தான்
T20 உலகக்கிண்ண குழுநிலை இன்றைய போட்டியில் அவுஸ்ரேலிய அணி, ஆப்கானிஸ்தான் அணியை நூலிழையில் வென்றது.
கடைசிவரை ஆட்டத்தில் போராடி வெறும் 4 ஓட்டங்களால் அவுஸ்ரேலிய அணியிடம் தோற்றுப்போனது ஆப்கானிஸ்தான் அணி.
முன்னதாக நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி களத்தடுப்பில் ஈடுபடத் தயாரானது.
அதன்படி துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களைக் குவித்தது.
அவுஸ்ரேலிய அணியின் துடுப்பாட்டத்தில் கிளென் மக்ஸ்வெல் 32 பந்துகளில் விளாசிய 54 ஓட்டங்கள் மிச்சல் மார்ஷ் 30 பந்துகளில் அடித்த 45 ஓட்டங்கள் ஆகக்கூடிய ஓட்ட எண்ணிக்கைகள்.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 மாத்திரம் இழந்து 164 ஓட்டங்களை சிறப்பாக விளையாடிப்பெற்றது.
துடுப்பெடுத்தாட்டத்தில் ஆப்கான் அணியைச் சேர்ந்த Rashid khan 23 பந்துகளில் ஆட்டமிழக்காது அடித்த 48 ஓட்டங்களும் Gulbadin Naib 23 பந்துகளில் 39 ஓட்டங்களும் மிகச்சிறப்பான ஒட்ட எண்ணிக்கைகள்.
கடைசி வரை போராடி 4 ஓட்டங்களால் மட்டும் தோற்று அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பையும் ஆப்கான் இழந்தது.
புள்ளிப்பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி நிலைக்கு வர அவுஸ்ரேலிய அணி இரண்டாம் நிலையை தக்கவைத்தது.
இருப்பினும் நாளைய இலங்கை எதிர் இங்கிலாந்தின் வெற்றி தோல்வியின் முடிவுகள் அணி நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது