ஐந்து வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் தூக்குத்தண்டனைகளை நிறைவேற்றியது குவெய்த்.
பல நாடுகள், மனிதாபிமான அமைப்புகளின் விமர்சனத்தை ஒதுக்கிவிட்டு ஏழு பேரைத் தூக்கிலிட்டுத் தண்டனைகளை நிறைவேற்றியிருக்கிறது குவெய்த். தூக்கிலிடப்பட்டவர்களில் இருவர் பெண்கள். அவர்களில் குவெய்த்தைச் சேர்ந்தோர் நால்வர், பாகிஸ்தான், சிரியா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவராகும்.
ஒரு குவெய்த்திய அரச குடும்பத்தினர் உட்பட ஏழு பேர் 2017 ஜனவரியில் தூக்கிலிடப்பட்ட பின்னர் இதுவரை எவரையும் அந்த நாடு தூக்கிலிடுக்குக் கொல்லவில்லை. தூக்குத்தண்டனையை 1960 களில் குவெய்த் அறிமுகம் செய்தது. போதை மருந்துகளைக் கடத்துபவர்களே பெரும்பாலும் அந்தத் தண்டனையைப் பெற்றிருக்கிறார்கள்.
பங்களாதேஷ், ஈரான், ஈராக், பொத்ஸ்வானா, தெற்கு சூடான், எகிப்து, ஜப்பான், எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் தூக்குத் தண்டனையைத் தொடர்ந்தும் நிறைவேற்றும் நாடுகளாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்