கோவில் திருவிழா கொண்டாடியவர்களை அரைத்துத் தள்ளிய பாரவண்டி 12 பேரைக் கொன்றது.
ஞாயிற்றுக்கிழமையன்று இந்தியாவின் பீகார் மாநாட்டில் வைஷாலி நகரில் நடந்த கொடூரமான வாகன விபத்தொன்றில் 12 பேர் இறந்தனர். அவர்களில் 4 பேர் குழந்தைகள் குழந்தைகளாகும். பாரவண்டியொன்று கோவில் திருவிழா கொண்டாட்டமொன்றுக்குள் நுழைந்தபோதே அந்த விபத்து நடந்தது.
விபத்துக்குக் காரணம் அருகிலிருந்த பிரதான சாலையில் அதிவேகமாகத் தனது பாரவண்டியை ஓட்டிவந்த ஓட்டுனர் கட்டுப்பாடு இழந்ததேயாகும். விபத்தான வண்டிக்குள் நெரிக்கப்பட்டுச் சாரதியும் இறந்திருக்கலாம் என்று சாட்சிகள் தெரிவித்தனர்.
மாநிலத் தலைநகரில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள வடக்கு பீகார் மாவட்டத்தில் இரவு 9 மணியளவில் ஊர்வலம் சாலையோரத்தில் உள்ள ஒரு அரச மரத்தின் முன் உள்ளூர் தெய்வமான பூமியா பாபாவுக்கு பிரார்த்தனை செய்ய கூடியபோது விபத்து ஏற்பட்டது. அவர்களின் ஊடாக இடித்துச் சென்ற பாரவண்டியால் ஒன்பது பேர் அவ்விடத்திலேயே இறந்தார்கள். மற்றும் பலர் அருகிலுள்ள மருத்துவ மனைக்கு உடனடியாக எடுத்துச் செல்லப்பட்டனர்.
விபத்தைக் கேள்வியுற்ற பிரதமர் நரேந்திர மோடி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தனது அனுதாபத்தைத் தெரிவித்தார். இறந்தவர்கள் ஒவ்வொருவரின் நெருங்கிய உறவினருக்கும் 2 லட்ச ரூபாய்களைப் பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து கொடுப்பதாகவும் அவர் அறிவித்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்