கத்தார் 2022 வெற்றிக்கிண்ணத்து மோதல்களில் D குழுவிலிருந்து அடுத்த கட்டத்துக்குச் சென்றன பிரான்ஸ், ஆஸ்ரேலியா.

புதன்கிழமையன்று கத்தாரில் நடந்த D குழுவின் நாலு நாடுகளுக்கிடையேயான மோதல்களின் மூலம் டென்மார்க்கும், துனீசியாவும் தொடர்ந்து விளையாடப் போவதில்லை என்று தெளிவாகியது. ஆசிய உதைபந்தாட்ட அமைப்பினைச் சேர்ந்த ஆஸ்ரேலியா அக்குழுவின் இரண்டாவது இடத்தைக் கைப்பற்றியது. ஏற்கனவே இரண்டு மோதல்களில் வென்று 6 புள்ளிகளைப் பெற்றிருந்த பிரான்ஸ் அடுத்த கட்டமான 16 தேசிய அணிகளுக்கிடையிலான மோதல்களுக்கு முன்னேறியிருந்தது.

செவ்வாய்க்கிழமையன்று நடந்த மோதல்கள் A மற்றும் , B குழுக்களில் எவரெவர் 16 நாடுகளுக்கிடையிலான போட்டிக்குப் போவதென்று தீர்மானிப்பவையாக இருந்தன. செனகலும், ஈகுவடோரும் மோதிக்கொண்டதில் செனகல் 2 – 1 வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மற்றைய மோதல் கத்தாருக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலிருந்தன. கத்தார் தனது முதலிரண்டு மோதல்களிலும் தோற்றிருந்ததால் அடுத்த கட்டத்துக்குப் போகமுடியாதென்பது ஏற்கனவே தீர்மானமாகியிருந்தது. மூன்றாவது மோதலிலும் 2 – 0 வித்தியாசத்தில் கத்தார் தோல்வியையே சந்தித்தது. நெதர்லாந்தும், செனகலும் அடுத்த மோதல்களுக்குத் தயாராகியிருக்கின்றன.

 குழுவில் அமெரிக்கா, ஈரானுடன் மோத இங்கிலாந்து, வேல்ஸ் அணியைச் சந்தித்தது. அமெரிக்கா 1 – 0 என்ற வித்தியாசத்தில் ஈரானை வீழ்த்தியது. இங்கிலாந்தோ ஒரேயடியாக 3 – 0 போட்டு வேல்ஸ் அணியைச் சரித்தது. இங்கிலாந்தும், அமெரிக்காவும் 16 நாடுகளுக்கிடையேயான மோதல்களில் விளையாடுமென்று தெளிவாகியது.

இதுவரை தெரிந்தவரையில் 16 நாடுகளுக்கிடையேயான மோதல்களில் நெதர்லாந்து சந்திக்கவிருப்பது அமெரிக்காவையாகும். அந்த மோதல் 03. 12 சனிக்கிழமையன்று நடைபெறும். இங்கிலாந்து அணி செனகல் அணியை ஞாயிறன்று நேரிடும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *