பிரிட்டன் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு நிதி ஆதரவு
பிரிட்டனில் உள்ள மில்லியன் கணக்கான குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், அரசாங்கத்திடமிருந்து 900 பவுண்ட்ஸ் வரையான வாழ்க்கைச் செலவு ஆதரவைப் பெறுவார்கள் என பிரிட்டனின் வேலை மற்றும் ஓய்வூதியத் துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிதியாண்டில் மூன்று முறை செலுத்தப்படும் தொகையில் நேரடியாக விண்ணப்பிப்போரின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்பி வைக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
கட்டம் கட்டமாக வழங்கும் இந்த நிதி உதவியில் ஆரம்ப கட்டமாக , ஆறு மில்லியனுக்கும் அதிகமான விசேட தேவையுள்ளோருக்கு தனித்தனியாக 150 பவுண்டுகளும், எட்டு மில்லியனுக்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 300 பவுண்டுகளும் வழங்கப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த உதவித்திட்ட அறிவிப்பு , பிரிட்டன் ஒரு சவாலான பொருளாதார சூழலுக்கு மத்தியில் வாழ்க்கைச் செலவு நெருக்கடியுடன் போராடுகின்ற நிலையில் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.