அமெரிக்கப் பாராளுமன்றம் சபாநாயகரொருவரைத் தெரிவுசெய்வதில் தோற்றுப் போனது முதல் தடவையாக.

கடந்த நவம்பர் மாதத்தில் அமெரிக்காவின் பாராளுமன்றத்து அங்கத்தவர்களைத் தேரிவுசெய்வதற்காக நடந்த தேர்தலின் பின்னர் வெற்றிபெற்றவர்கள் இன்று முதல் தடவையாகக் கூடினர். ரிபப்ளிகன் கட்சியினர் பெரும்பான்மையைப் பெற்றிருக்கும் அந்தப் பாராளுமன்றத்தில் முதலாவது வாக்கெடுப்பில் சபாநாயகரொருவரைத் தெரிவுசெய்ய முடியாமல்  போனது 100 வருடங்களாக நடந்ததில்லை. 

ரிபப்ளிகன் கட்சியின் உத்தியோகபூர்வமான சபா நாயகர் வேட்பாளரான கெவின் மக்கார்த்தியால் 202 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. 218 வாக்குகள் பெற்றாலே ஒருவர் அப்பதவியைப் பெற முடியும். அவரது கட்சியைச் சேர்ந்த 10 பேர் வேறொரு பிரதிநிதிக்கும், மேலும் ஒன்பது பேர் வேட்பாளரக இல்லாதோர், சபையிலில்லாதோரையும் தெரிவுசெய்திருந்தனர். 

சிப் ரோய் ஏ.ஒஸ்டின் என்ற ரிபப்ளிகன் கட்சிப் பிரதிநிதி அச்சபையில் மக்கார்த்தி சபாநாயகராக இருப்பதில் அதிருப்தியடைந்திருக்கிறார். அவரே கட்சியின் ஒரே வேட்பாளருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கிறார். ஏற்கனவே டொனால்ட் டிரம்ப் ஆதரவு, எதிர்ப்பு ஆகியவைகளால் பிளவுபட்டிருக்கும் ரிபப்ளிகன் கட்சியினரால் சபாநாயகர் ஒருவரைத் தெரிவு செய்ய முடியாமல் போனது மேலுமொரு அவமானம் ஆகும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *