வளைகுடா உதைபந்தாட்டக்கிண்ண அரையிறுதி மோதல்களில் எமிரேட்ஸுக்கும் இடமில்லை.
வளைகுடா நாடுகளின் உதைபந்தாட்டக் கிண்ணத்துக்கான மோதல்கள் ஈராக்கில் பஸ்ராவில் நடந்து வருகின்றன. அந்த மோதல்களின் ஆரம்பக்கட்ட விளையாடுக்களில் தோற்றுப்போய் வெளியேறும் இரண்டாவது நாட்டு அணி எமிரேட்ஸுடையதாகும். ஏற்கனவே தனது மோதல்கள் பெரும்பாலானவற்றில் தோற்றுப்போன சவூதி அரேபியா வெளியேறிவிட்டது.
எட்டு நாடுகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு முதலாவது சுற்றில் பங்குபற்றின. ஒவ்வொரு அணியிலிருந்தும் இரண்டு நாடுகள் அரையிறுதி மோதல்களுக்கு முன்னேறும் வாய்ப்பிருந்தது. எமிரேட்ஸ், சவூதி அரேபியாவைத் தவிர யேமன், குவெய்த் அணிகளாலும் அரையிறுதிப் மோதல்களுக்கு முன்னேற இயலவில்லை.
திங்களன்று ஆரம்பிக்கவிருக்கும் அரையிறுதி மோதல்களில் ஒன்றில் பஹ்ரேய்ன் அணி ஓமான் அணியை எதிர்கொள்ளும். மற்றைய மோதல் ஈராக் அணிக்கும் கத்தார் அணிக்கும் இடையே நடைபெறும்.
சாள்ஸ் ஜெ. போமன்