பஸ்ராவில் நடக்கும் வளைகுடா நாடுகளுக்கான மோதல்களில் முதல் சுற்றில் தோல்வியடைந்தது சவூதி அரேபியா.

வளைகுடா நாடுகளின் உதைபந்தாட்டக் கிண்ணத்துக்கான மோதல்கள் ஈராக்கில் பஸ்ராவில் நடந்து வருகின்றன. அந்த மோதல்களில் முதல் சுற்றுக்கான மூன்று மோதல்களில் ஒரு குழுவின் விளையாட்டுக்கள் முடிந்துவிட்டிருக்கின்றன. தனது மோதல்கள் மூன்றில் ஒன்றை மட்டுமே வென்ற சவூதி அரேபிய அணி அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியாமல் வியாழனன்று நாடு திரும்புகிறது.

எட்டு நாடுகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு முதலாவது சுற்றில் பங்குபற்றுகின்றன. ஒவ்வொரு அணியிலிருந்தும் இரண்டு நாடுகள் அரையிறுதி மோதல்களுக்கு முன்னேறும். அந்த மோதல்கள் ஜனவரி 16 ம் திகதி ஆரம்பமாகவிருக்கின்றன. முதலாவது குழுவில் தலா 7 புள்ளிகளைப் பெற்ற அணிகளான ஈராக், ஓமான் ஆகிய நாடுகளின் அணிகள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறியிருக்கின்றன. 

இரண்டாவது குழுவில் ஏற்கனவே இரண்டு மோதல்களையும் வென்று பஹ்ரேய்ன் அணி 6 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. அந்த அணி ஒரேயொரு வெற்றியைப் பெற்று 3 புள்ளியைப் பெற்றிருக்கும் குவெய்த்தை இன்று எதிர்கொள்ளும். அதேபோலவே தனது மோதல்களில் ஒன்றை மட்டும் வென்றிருக்கும் கத்தார் அணியானது இரண்டு மோதல்களிலும் தோல்வியடைந்திருக்கும் எமிரேட்ஸ் அணியை இன்று எதிர்கொள்ளும். வெற்றிபெறும் அணிகள் ஈராக், ஓமான் ஆகிய நாடுகளின் அணிகளைத் தத்தம் அரையிறுதி மோதல்களில் நேரிடும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *