இலஞ்சம் வாங்க நினைத்தவருக்கு நடந்த நிலை….!

இலஞ்சம் வாங்குவதும் தப்பு லஞ்சம் கொடுப்பதும் தப்பு என்று கேள்வி பட்டு இருக்கிறோம்.பல இடங்களில் லஞ்சம் வாங்கி பிடிபட்ட சம்பவங்களும் பாதிவாகி இருந்தமையை நாம் அறிந்திருக்கிறோம்.

அந்த வகையில் இன்று 24 ம் திகதி இலங்கையின் பிரதான நகரங்களின் ஒன்றான அவிசாவெள்ள பேருந்து நிலைய புதிய கட்டிட தொகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையை விரைவாக வழங்குவதாக கூறி இலஞ்சம் கோரப்பட்டுள்ளது.

அதற்கமைய அவிசாவெள்ள மாநகர சபையினுள் இலஞ்சம் பெரும் போது, அவிசாவெள்ள மாநகர சபையின் பதில் செயலாளரும் ,வருவாய் பரிசோதகரும் ,இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *