சூப்பர் சிக்ஸ் குள் நுழைந்தது இலங்கை அணி

இலங்கை ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையிலான பி பிரிவின் தகுதி காண் சுற்றுப் போட்டியில் இலங்கை அணி வெற்றிப்பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஸ்கொட்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணியை அழைத்தது. இதன் பிரகாரம் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 245ஓட்டங்களை பெற்றது.246என்ற இலக்கை நோக்கி எதிர்த்து ஆடிய ஸ்கொட்லாந்து அணி 29 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 163ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதன் மூலம், வெற்றிப்பெற்ற இலங்கை அணி சூப்பர் சிக்ஸ் போட்டிக்குள் நுழைந்தது.
சூப்பர் சிக்ஸ் போட்டியில் வெற்றி பெறும் இரு அணிகள் இறுதி போட்டியில் பலப் பரீட்சை நடத்தும்.

முதல் சுற்றின் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கை சூப்பர் சிக்ஸ் க்குள் நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *