கட்டு நாயக்க வந்த ரஜினிகாந்..!

சுப்பர் ஸ்டார் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவராலும் விரும்பப்படும் ஒரு நடிகர்.எத்தனை ஸ்டார்கள் சினிமாவில் வந்தாலும் அது சுப்பர் ஸ்டாருக்கு ஈடாகாது.

அந்தளவு மக்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவர்.அந்த வகையில் நேற்றைய தினம் சூப்பர் ஸ்டார் ரஜினி காந் இலங்கை கட்டுநாயகக விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

இந்தியாவின் சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் விமானத்தில் நேற்று 14.07.2023) முற்பகல் (11.30 அளவில் கட்டுநாயக்கவுக்கு வந்த ரஜினிகாந்தை விமான நிலையத்தின் சிறப்பு அதிதிகள் முனையத்திற்கு (VIP Gold Route Service) அழைத்து விசேட வரவேற்பும் அளிக்கப்பட்டது.

இலங்கை ஊடாக வேறு ஒரு நாட்டிற்கு செல்வதற்காக சில மணிநேரம் சுப்பர் ஸ்டார் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்கி இருந்தமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *