சிறைச்சாலைகளில் அதிகரித்து வரும் கைதிகள்..!
இலங்கையில் அண்மைக்காலமாக சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய கணக்கெடுப்பின் போது 29000சிறை கைதிகள் அதிகரித்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தகவலை இலங்கை சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளரும் மேலதிக ஆணையாளருமான சந்தன ஏக்க நாயக்க தெரிவித்துள்ளார்.இது தடுத்து வைக்க கூடிய கைதிகளின் எண்ணிக்கையில் 2 மடங்காகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை கைதிகள் பெரும்பாலும் போதைப்பொருளுடனான குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலையின் நெரிச்சலை குறைக்கும் நோக்கில் 20வருடங்களுக்கு மேலாக தண்டனை அனுபவித்துவரும் கைதிகளை விடுதலை செய்ய ஆலோசித்து வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இதே வேளை 5.5 பில்லியன் ரூபா அளவில் சிறைக்கைதிகளின் உணவிற்காக செலவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.