என் முதற் காதல் – எழுதுவது கவிஞர் கேலோமி..!
நான்
என்னை
உணராத
போதே!
இயற்கையின்
இழுவையை
உணர்ந்தேன்.
ஆசரிக்கப்படாத
காலத்தின்
அலுவலில்
இயற்கை
தன்
எதிர்விசை
ஈர்ப்பை
மையலை
ஆனந்தத்தை
சந்தோஷத்தை
பாலபருவத்திலே
வழங்கியது.
அது
காதல்
காமம்
உணர்வு
உணர்ச்சி
இவற்றால்
வரையறை
கற்பனை
செய்யமுடியாத
இயலாத
மனதின்
விலாசம்.
ஏக்கம்
தூக்கம்
ஹார்மோன்
தூண்டல்
இல்லாத
ஈர்ப்புகளின்
கற்பின்
நினைவு
சின்னம்.
நம்மை
அறியாத போது
எந்த
எதிர்பார்ப்பும்
இல்லா
சுகந்தம்.
பள்ளியில்
சாலையில்
பார்வையில்
வெட்கத்தில்
உணவு
இடைவெளியில்
கடந்த
தருணம்.
ஒருநாள்
பள்ளி
இல்லாத
போது
நிஜத்தை
கடக்க
இயலா
யுகம்.
நேத்து
ஸ்கூல்
லீவு
அதனால்
உன்னை
பார்க்கவில்லை.
இந்தா
சாக்லேட்
சாப்பிடு
என்ற
போது
மனதில்
வானம்
பூமி
கடல்
சிறிதாகி
போனது.
அலுவல்
பணி
காரணமாக
தாய்
தந்தை
மாற்றம்
பெற்றபோது
பள்ளியில்
பிரியா
விடை
தோழர்களுக்கு
கொடுத்தபோதும்
மேகலைக்கு
பிரியா
விடை
தர
இயலவில்லை.
பள்ளி படிப்பு
வேற்று
ஊரில்
முடித்து
திரும்ப
வந்த
போது
அவர்கள்
தாய்
தந்தையர்
வேற்று
ஊரில்
மாற்றம்
ஆகி
இருந்தனர்.
வாடகை
வீடாம்.
அவர்கள்
ஊருக்கே
சென்றுவிட்டனர்.
எங்கே
என்று
தெரியாது.
தம்பி
நீ
என்றபோது
நான்
பள்ளி
தோழன்
என்ற
போது
துருவங்கள்
தொண்டை
அடைத்தன.
அதன்
பிறகு
வயதில்
ஆயிரம்
பார்வைகள்.
காதல்கள்
வேகங்கள்.
தாபங்கள்.
கோபங்கள்
காயங்கள்.
காமங்கள்.
ஆனால்
அனைத்திலும்
ஓர்
சுயம்
எதிர்பார்ப்பு.
அவளே!
இந்த
மாபெரும்
பிரபஞ்சத்தில்
கடைசி
மனுஷி
அல்ல.
நீ
அறிவாலும்
திறமையாலும்
முன்னேற
உன்
தேவைக்கு
ஏற்ற
காதல்
கிடைத்து
கொண்டே
இருக்கும்
என்ற
பிரபஞ்சன்
வார்த்தை
அவளிடம்
தோற்றது.
முற்றும்
துறந்தவன்
கூட
முதற் காதலை
மனதின்
ஏதோ
ஓர்
மூலையில்
பத்திரப்படுத்தி
வைப்பான்.
நிஜத்தின்
ஆற்றாமை
இங்கு
கடத்தல்
அரிது.. கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மேட்டூர் அணை.