கோழி இறைச்சியின் விலை குறைய இருக்கிறது..!
மக்காச்சோளத்திற்கான இறக்குமதி வரியை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய இரண்டு வாரங்களுக்குள் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய வாய்ப்பு உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வரி குறையும் பட்சத்தில் எதிர் காலத்தில் 1200 ரூபாவிற்கு ஒரு கிலோ கோழியினையும் ,40 ரூபாவிற்கு முட்டையொன்றையும் விற்பனை செய்யமுடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கோழியின் விலையும், முட்டையின் விலையும் அதிகரித்து இருப்பதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றமை குறிப்பிடத்தக்கது.