கண்ணன் வந்தான்
தலைப்பு; கண்ணன் வந்தான்!
1.ஆவணி”தேய்பிறை அஷ்டமியில் அவதரித்தான் எங்கள் கண்ணபிரான்!!
- ஏழைக்குசேலரை நண்பனாக்கினான்!
- ஈடில்லா அன்புக்கு,இணையேதுமில்லை என்றான்!
4.ரோகினி நட்சத்திரமதில் லோகம் காத்திட அவனபிறந்தான்!
5.வெண்ணெய்,நெய்க்கு அடிமையவன்!
- குசேலர் கொடுத்த அவலை விரும்பிஉண்டான்!
- அவலை அவனும் அள்ளிஅள்ளிஉண்ண குசேலரின் வறுமை ஒடியதே!
- சபைதனில் திரெளபதி மானங்காக்க கூப்பிட்ட குரலுக்கு ஒடிவந்தான்!
9.இது அது வேண்டுமென எதுவும் அவன்விரும்பவில்லை!
10.பக்திமனதோடு பரந்தாமன் பெயர் சொன்னால் பாய்ந்தோடி வருவானே!
- பரிதவிக்கும் மனதுக்கு பாங்காய் இதம் தருவானே!
12.உச்சரிப்போம் அவனது திருநாமமதை!
- விடுபடுவோம் பலமனத்துயரிலிருந்து!
- கண்ணா கண்ணா நீ எங்கே எனது,மனமும் அங்கே!
- கைநீட்டி அழைக்கின்றேன்.கருணை புரிய நீயும்வா!!!
16.கோகுலாஷ்டமி கொண்டாட்டம்! அவலும்,சீடையும்,முறுக்கும்,அதிரசமும்,அதோடு,வெண்ணையுமௌ விருப்பத்தோடு படைக்கின்றேன்.விருந்துண்ண ஒடிவா!
17.கண்ணா நீயும் ஒடிவா.கண்ணா நீயும் ஒடிவா!!
கோமதிசிதம்பரநாதன்
உறையூர்,திருச்சி3