கண்ணன் வந்தான்

தலைப்பு; கண்ணன் வந்தான்!

1.ஆவணி”தேய்பிறை அஷ்டமியில் அவதரித்தான் எங்கள் கண்ணபிரான்!!

  1. ஏழைக்குசேலரை நண்பனாக்கினான்!
  2. ஈடில்லா அன்புக்கு,இணையேதுமில்லை என்றான்!

4.ரோகினி நட்சத்திரமதில் லோகம் காத்திட அவனபிறந்தான்!

5.வெண்ணெய்,நெய்க்கு அடிமையவன்!

  1. குசேலர் கொடுத்த அவலை விரும்பிஉண்டான்!
  2. அவலை அவனும் அள்ளிஅள்ளிஉண்ண குசேலரின் வறுமை ஒடியதே!
  3. சபைதனில் திரெளபதி மானங்காக்க கூப்பிட்ட குரலுக்கு ஒடிவந்தான்!

9.இது அது வேண்டுமென எதுவும் அவன்விரும்பவில்லை!

10.பக்திமனதோடு பரந்தாமன் பெயர் சொன்னால் பாய்ந்தோடி வருவானே!

  1. பரிதவிக்கும் மனதுக்கு பாங்காய் இதம் தருவானே!

12.உச்சரிப்போம் அவனது திருநாமமதை!

  1. விடுபடுவோம் பலமனத்துயரிலிருந்து!
  2. கண்ணா கண்ணா நீ எங்கே எனது,மனமும் அங்கே!
  3. கைநீட்டி அழைக்கின்றேன்.கருணை புரிய நீயும்வா!!!

16.கோகுலாஷ்டமி கொண்டாட்டம்! அவலும்,சீடையும்,முறுக்கும்,அதிரசமும்,அதோடு,வெண்ணையுமௌ விருப்பத்தோடு படைக்கின்றேன்.விருந்துண்ண ஒடிவா!

17.கண்ணா நீயும் ஒடிவா.கண்ணா நீயும் ஒடிவா!!

கோமதிசிதம்பரநாதன்
உறையூர்,திருச்சி3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *