ஆசிரியர்களும் சிறுவர் துஷ்பிரயோகமும்-எழுதுவது கவிஞர் கேலோமி

சிறுவர் துஷ்பிரயோகம் ஆசிரியர்களும்


மனதின்
விகாரங்கள்
சிறு
சிறு
தீவுகளாகி
போனது.


நன்மைக்கான
தடம்
முற்றிலும்
அழிக்கப்பட்டது.


நடிகர்கள்
நடிகைகள்
ஆபாசத்தின்
உச்சம்
தொட்ட
திரைப்பட
ஆடல்
பாடல்
நிகழ்சிகள்.


கலையை
அழித்து
நஞ்சாக்கிய
போதை
வஸ்துக்கள்.


சகட்டு
மேனிக்கு
கிடைக்கும்
ஆபாச
தகவல்கள்.


செல்போன் களின்
கட்டுப்பாடற்ற
ஆபாச
தகவல்கள்.


கைக்குள்
அடக்கமான
ஆசாபாசங்கள்.


தொடர்பு
தகவல்கள்.
ஹார்மோன்களை
சீண்டி
பார்க்கும்
ஆசிரிய
வக்கிரகங்கள்.


வெளியே
சொல்ல
இயலாத
பால்
உரசல்கள்.


கிள்ளல்கள்.
தடுமாறி
சிறகடிக்கும்
மனதின்
விகாரங்கள்.


நீதி
நியாயம்
தர்மம்
அறம்
மறந்த
காம
சுதந்திரங்கள்.


பெற்றோர்களின்
அறியாமையை
பயன்படுத்தி
கொள்ளும்
ஆசிரிய
மாணவ
கூட்டங்கள்.


நம்பிக்கைகளை
தகர்த்தெரியும்
வெறித்தனங்கள்.


கொலை
களவு
கர்ப்பம்
மது
போதை
என்றழியும்
அபிலாசை
பிரியர்கள்.


மத
போதைக்குள்
அடைக்கலமாகி
சிக்கி
சீரழியும்
கற்பின்
துயரங்கள்.


பாடசாலைகள்
தன்
ஆதி
சுருதியை
இழந்துவிட்டது.


வேலி
பயிர்களை
மேய்ந்து
போஷாக்கு
அடைந்துவிட்டது.


அறம்
அழிந்த
நாட்டில்
காம
தாண்டவம்.


பருவத்தின்
மேல்
பழி
போட்டு
நடக்கும்
பாதகம்.


நேர்மையான
ஆசிரியர்களை
தேடிய
உலகத்தில்
நன்றி
மறந்த
மாணவர்களின்
கோர
முகங்கள்.


இரண்டும்
இங்கு
சமர்
செய்வதில்
சரி
நிகர்.


கல்வி
இன்று
கற்பின்
விரோதி?
எச்சரிக்கை
இங்கு
காமம்
மட்டுமல்ல.


அழிந்து
போகும்
ஒழுக்கம்.
சீர்பெற
இங்கு
அறத்தை
தவிர
ஏதுமில்லை.


அதை
போதிப்பார்
யாருமில்லை.


கேலோமி
மேட்டூர் அணை.
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *