மலையக குயிலுக்கு ஒரு கவி
அசானி
இலட்சியத்திற்காக நாடு விட்டு நாடு வந்தப் பைங்கிளியே
உன் குரலோசை நாடெங்கிலும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன
பாராளுமன்றத்திலும் உன் பேச்சு தான் எங்கெங்கும் உன் குரலோசை
சிட்டாக வந்தாய் உன் குரலால் சிறகாய் பறந்து சென்று கொண்டிருக்கிறாய் தமிழகமெங்கும்
ஈழத் தமிழச்சியே தமிழர்களை நம்பி வந்தாய் குயிலான குரலில் வலம் வந்து கொண்டிருக்கிறாய்
சிறகாய் வந்த நீ உன் சிறகுகளை பொறக்க விடாமல் சில சதிகள் சாதிக்கப் பிறந்தவள் நீ சாதனை மட்டுமே உன் குறிக்கோள்
மனம் வெதும்பாதே தமிழர்களை நம்பி வந்தவர்கள் தரணியெங்கும் புகழப்படுவார்கள்
உன் முயற்சியை கைவிடாதே அழகான பைங்கிளி அசானியே!
நிலவுத்தோழி ஆர் ஜே உமாதேவி