மதுவை தவிர்ப்போம்

மதுவைத் தவிர்ப்போம்

உயிரோடும் உணர்வோடும் விளையாடும் மதுரசம் உறவோடும் பிரிவாக்கும் பழரசம்

ஊரார் தூற்ற உற்றார் அழுதிட உடமைகள் பறந்திட உடலதுவும் மெலிந்திட நாணம் பறிபோகும்

பகைமூளும் சூதுகவ்வும் நாளும் மானம் கப்பலேறும் நாடிவந்த நங்கையவளும் தாலிக்கொடியும் பறிபோகும்

கூடிசைத்த கூட்டினக் குஞ்சுகளும் சிதறியோடும் வாழவக்கற்று வீதியில் திக்குகெட்டு நூலறுந்த பட்டமாய்

மழைக்கால நுணலாய் கதற கஞ்சியின்றி காய்ந்திடுமே உனதங்கம்

உனையேந்திய கருக்கூடத்தின் தாய்மையின் மேன்மையை உணரு… உன்னுயிர் காக்க உமையவள் ஏற்ற விரதம் பாரு

மது மானுடத்தின் சூது
மது மாண்பினத்தின் கேடு
மது மரணத்தின் தூது
மானுடத்தின் அறம் காக்க மாந்தினத்தின் குலம் காக்க
மதுவைத் தவிர்ப்போம். ஆக்கம் ✍️ இருளம்பட்டு ப.கல்யாணசுந்தரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *