மீட்டாத வீணை..!

நயம்பட உரை

நயமேயெனில் நாவாடும் கயமையன்றோ கவியாடி காதல்தனை வீழ்த்திடும் வல்லமையூடே

கள்ளூறும் காம்பினங்களாய் கதைதனில் செவிமடுத்தாடும் காதல்தனில் நயமாய்

புசியாதிருக்கும் சேயோடு பசியாற அழைத்திடும் தாயவள் நயமாய்

வண்டூறா மலர்தம் மகரந்தம் விலக இதழ் விரித்தாட நவில நயமாதலே

வண்டுண்ணும் பூவுண்டே தேன்சொறிந்த மலரிதழால் மரணம் நயமாதலே

எழுத்தாணி ஏதெழுகினும் குறைகாணாது வெண்சிரிப்போடு ஏடேற்கும் நயமாதலே

உயிர்மாய்ந்தே உரமாம் உலகு நன்னெறி வளர்ந்தே நயமாம் பழகு
மீட்டாத வீணைதனில் நாதமிராது சொல்லாடல் இல்லாத நயமேது

உடலாடும் மொழிதனை வென்றிட விழியாடும் மொழிதனை மொழிந்திடு
உறவுக்குள் வேராய் ஊன்றிட நாவாடு நயம்பட

சொல்லூறா காளையினங்களையும் கவியூற வைத்த புலனமும் புனலூற்றி அளவிடும் நயமாய்

புற்றீசல் பொழுதொரு நாளாகும் நம் புன்னகை என்றுமே மருந்தாகும்
நா….நயம்பட உரைப்போம்

எந்நாளும் இதயங்களை இணைத்திடுவோம் இணையத்திலே…
ஆக்கம் ✍️ இருளம்பட்டு
ப.கல்யாணசுந்தரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *