இப்படியான காகிதங்கள் உங்களிடம் இருக்கிறதா…?

அன்புள்ள தோழியே!
உன் மனக்கண்ணால் வாசிக்க
என் நினைவுகளால் பேசுகிறேன்!

கண்ணோடு கண்ணாக
என்னோடு நீயாக
ஒன்றான காலங்கள்
கலைந்துபோன கோலங்கள்!

வகுப்பறையின் மேசையிலே
பெயர் பொறித்தோம் ஆசையிலே
எரிந்து கூட போயிருக்கும்,
பிரிந்திருக்க வாய்ப்பில்லை!

ஒளிந்து பிடிக்கும் விளையாட்டில்
வலியவந்து மாட்டிக் கொள்வாய்,
ஒளிந்த இடம் தெரிந்தாலும்
பிடித்திடாமல் விலகிச்செல்வாய்!

வீதியோரம் விளையாடி
சேர்ந்துகொண்டு வீடு செல்வோம்,
விதியோட விளையாட்டில்
ஆளுக்கொரு வீடு சென்றோம்!

கல்யாணம் கட்டிக்கிட்டு
கணவனோட போகையிலே…
கட்டிப்பிடித்து அழுதவளே,
பெற்றத் தாயாய்த் தவித்தவளே!

தோழியரின் சினேகிதங்கள்
கிழிந்து போகும் காகிதங்கள்.

விழிநீரில் வரைகின்ற கோலங்கள்,
வழியினிலே மறைகின்ற கானல்கள்!

ஹேமா
ஹைதராபாத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *