தமிழ் நாட்டில் இடை நிலை ஆசிரியர்கள் போராட்டம்…!

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நடைபெற்று வரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் பற்றிய பதிவு:

தமிழகத்தில் கிட்டத்தட்ட 35000 இடைநிலை ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் 20000 க்கும் மேற்பட்டோர் 2009 ஆம் ஆண்டு பணி நியமனம் செய்யப் பட்டவர்கள்.

இதில் 2009 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி வரை பணிக்குச் சேர்ந்தவர்களின் அடிப்படை ஊதியம் 8370 ஆகவும், அதே 2009 ஆம் ஆண்டு ஜீன் 1 ஆம் தேதி முதல் பணிக்குச் சேர்ந்தவர்களின் அடிப்படை ஊதியம் 5200 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம வேலை பார்க்கும் இரு தரப்பினரிடையே சம ஊதியம் வேண்டும் என்பதே இவர்களது கோரிக்கையாக உள்ளது.

கடந்த அ‌திமுக ஆட்சியில் இதை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய போது அன்றைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு மு.க.ஸ்டாலின் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி கொடுத்து இருந்தார்.

2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலும் 311 ஆவது கோரிக்கையாக இதை அறிவித்து கட்டாயம் நிறைவேற்றப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் கடந்த செப்டம்பர் மாதமும் டிசம்பர் மாதமும் நடைபெற்ற போராட்டத்திலும் அரசு தலையிட்டு எந்தவித தீர்வையும் அளிக்காத சூழலில் தற்போது மீண்டும் இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தேர்வு நேரத்தில் இதுபோன்ற போராட்டங்கள் மாணவர்கள் படிப்பை பாதிக்கும் என்பதை உணர்ந்து அரசு அடக்குமுறையில் ஈடுபடாமல் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றினால் நன்றாக இருக்கும் என்பதே இன்றைய சூழலில் பொது மக்களின் கருத்தாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *