உழைப்பாளிகளின் ஆபரணங்கள்..!
💧💧💧💧💧💧💧💧💧💧💧 *வியர்வை பூக்கள்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்
💧💧💧💧💧💧💧💧💧💧💧
வியர்வை
உழைப்பாளிகளின்
உடல்களை அலங்கரிக்கும்
வைர ஆபரணங்கள்…..
உழைப்பாளிகளின்
உடலில் மணமாகவும்….
முதலாலிகள் உடலில்
நாற்றமாகவும் இருப்பதன்
ரகசியம் தான் என்னவோ ?
சிந்தும்
ஒவ்வொரு துளிகளும் வீணாவதில்லை…..
அவை ஒவ்வொரு
நாணயங்களாக
மாற்றப்படுகிறது…..!!
வேர்வைத் துளிகள்
வெற்று உடம்பில்
உருண்ட ஓடுவதை
அனுபவித்தவனுக்குத்தான்
தெரியும்….
அந்த சுகத்திற்கு முன்னால்
கன்னிப் பெண்ணின்
கை தீண்டலும்
தோற்றுப் போகும் என்பது…!!
இளமையில்
“வியர்வைத் துளிகளை”
சேமித்து வைப்பவன்…..
முதுமையில்
“கண்ணீர் துளிகளாக”
செலவழிக்கிறான்…..!!
கதிரவனின்
வெப்பம் தாளாமல்
ஆன்மா தவிக்கும் போது….
உடல் அன்னை
“வேர்வையால் குளிப்பாட்டி”
விடுகிறாள்….!!
இதை செலவழிப்பவர்கள்
பணத்தை மட்டுமல்ல
ஆரோக்கியத்தையும்
சேமித்து வைக்கிறார்கள்….!!
தாபத்தியத்தின் முடிவில்
தேகத்தில் பூக்கும்
வியர்வை பூக்கள்….!
உடல் கடலில்
மூழ்கி இருக்கும்
முத்துக்கள்….
இதில் குளிப்பவருக்கு
பெயரும் புகழும்
வாய்ப்பு வசதியும்
வாசல் தேடி வரும்
முத்துக்களாக…..
வியர்வை நீரை
பன்னீராக்குவதும்
கழிவு நீராக்குவதும்….
அவரவர்
கைகளில் தான் இருக்கிறது…!! *கவிதை ரசிகன்*
💧💧💧💧💧💧💧💧💧💧💧