Delhi Capitals 6 விக்கெட்டுக்களால் வென்றது IPL 2024

IPL 2024 இன் இன்றைய 32 ஆவது T20 போட்டியில் Delhi Capitals அணி Gujarat Titans அணியை 6 விக்கட்டுக்களால் தோற்கடித்து வெற்றிபெற்றது.

நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணயச்சிழற்சியில் வெற்றிபெற்ற டெல்கி பந்துவீச தீர்மானித்து களத்தடுப்பிற்காக களமிறங்கியது.

குஜராத்தின் விக்கெட்டுக்களை மள மள வென்று பிடுங்கிய டெல்கி அணி ஆட்டத்தின் ஆரம்பம் முதல் களத்தடுப்பில் பலமாக இருந்தது.
அதன்படி 17.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்த குஜராத் 89 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய டெல்கி , அதிரடியாக துடுப்பெடுத்தாடி ஒன்பதாவது  ஓவரிலேயே  வெற்றியிலக்கை அடைந்து 4 விக்கெட்டுக்களை இழந்து 92 ஓட்டங்களை குவித்து வெற்றிபெற்றது.

ஆட்டத்தின் ஆட்ட நாயகனாக விக்கெட் காப்பாளராக செயற்பட்டு,இரண்டு பிடிகளையும்,இரண்டு ஸ்டாம்ப் முறையிலும் எதிரணியை ஆட்டமிழக்க வைத்த Delhi capital அணியின்  Rishabh Pant தெரிவு செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *