உலகின் மிகச்சிறந்த விமானநிலையம் கட்டார் டோகாவின் ஹமாத்

உலகின் மிகச்சிறந்த விமானநிலையமாக கட்டார், டோகாவின்  ஹமாத் சர்வதேச விமான நிலையம் தெரிவாகியுள்ளது.


இங்கிலாந்தை தளமாக கொண்டியங்கும்  skytrax intelligence நிறுவனம் வருடாவருடம் வெளியிடும் ஆய்வில் குறித்த வெற்றி பதிவாகியுள்ளது,

குறித்த வெற்றிக்கான விருது  ஜேர்மனி frankfurt விமானநிலையத்தில் நடைபெற்ற விருது வழங்கும்  நிகழ்ச்சியில் வழங்கப்பட்டுள்ளது.


12 தடவைகள் மக்கள் விருதை பெற்று , கடந்தவருடமும் முதன்னிலையை தக்கவைத்த சிங்கப்பூர் சாங்கி விமானநிலையம்  (Singapore Changi Airport) , இந்தத்தடவை இரண்டாம் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது.


இருப்பினும் மிகச்சிறந்த குடிவரவு சேவைகளை வழங்கும் விமானநிலையமாகவும் , ஆசியாவின் மிகச்சிறந்த விமான நிலையமாகவும் சிங்கப்பூரின் சாங்கி விமானநிலையம் தெரிவானது.

டோகா ஹமாத் விமானநிலையத்தின் இந்த வெற்றி கடந்த 2021,2022ம் ஆண்டுகளுக்கு பின்னரான மூன்றாவது வெற்றி இதுவாகும்.
மக்கள் பாவனையாளர்களுக்கிடையில் நடத்தப்பட்ட ஆய்வில் முதல் 10 இடங்களைப்பெற்ற நாடுகளின் விமான நிலையங்களை கீழே பாருங்கள்

Skytrax: World’s best airports in 2024

  1. Hamad International Airport
  2. Singapore Changi Airport
  3. Incheon International Airport
  4. Haneda Airport
  5. Narita International Airport
  6. Paris Charles de Gaulle Airport 
  7. Dubai International Airport
  8. Munich International Airport
  9. Zurich International Airport
  10. Istanbul International Airport

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *