23 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியது ஸ்பேஷ் எக்ஸ்..!
அதிவேக இணையசேவைக்காக ஸ்பேஷ் எக்ஸ் நிறுவனம் 23 ஸ்டார்லிங்க் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.
நாசாவுடன் இணைந்து பால்கன் -9 ரக ரொக்கெட் மூலம் இந்த செயற்கை கோள்கள் ஏவப்பட்டுள்ளது.இந்த கோள்கள் கென்னடி விண்வெளி ஆய்வு நிலையத்திலிருந்து ஏவப்பட்டுள்ளது.
பல நாடுகள் செயற்கை கோள்களை விண்வெளியில் செலுத்த போட்டி போட்டுக்கொண்டு இருக்கும் தருணம் இந்த தனியார் நிறுவனமும் முனைப்புடன் செயற்பட்டுவருகிறது.
இந்த செயற்கை கோள்கள் வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.