அனுமதியின்றி ரோமின் கொலோசியத்துக்குள் நுழைந்த அமெரிக்கத் தம்பதிகளுக்குத் தண்டம் விதிக்கப்பட்டது.
வருடாவருடம் சுமார் 8 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ரோம் கொலோசியம் ரோமின் சரித்திர முக்கியம் வாய்ந்த இடங்களில் ஒன்றாகும். அங்கே மூடப்பட்டிருக்கும் சமயத்தில் நுழைவதோ, தவிர்க்கப்பட்ட நடத்தைகளில் ஈடுபடுவதோ கடுமையாகத் தண்டிக்கப்படுவது வழக்கம். அங்கிருக்கும் எச்சரிக்கைப் பலைகைகளில் தண்டம் 2,000 எவ்ரோக்களுடன் இரண்டு வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்பதை வாசிக்கலாம்.
கொலோசியத்தின் திறந்தவெளி அரங்குப் பகுதியில் அதிகாலை நேரத்தில் களவாக நுழைந்த அமெரிக்கர்கள் அங்கே பியர் அருந்திக்கொண்டிருந்தார்கள். அவ்வழியே சென்றவர்கள் அதைக் கண்டு அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவே அவ்விருவரும் கைதுசெய்யப்பட்டார்கள். அவர்களுக்கு 800 எவ்ரோ தண்டம் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.
2015 இல் அமெரிக்கப் பெண்களிருவர் அங்கே சுவரில் தமது பெயரைப் பெரிய எழுத்தில் எழுதிவிட்டுத் தங்களைப் படம்பிடித்துக்கொண்டிருந்ததால் கைது செய்யப்பட்டார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்