ஒப்பனைகளில் உலவும் முகம்

வெள்ளையன் ஆட்சியில்
கொள்ளையனாகி அடிமைப்படுத்தி சுரண்டிய செல்வத்தைப்போல
இன்னொருவனின் உணர்வை உள்படுத்த தனது சுயத்தை சுத்தமாக வெள்ளையடிக்கும் கூட்டங்களுள் உணர்வுக்கும் ஒப்பனைப்படுத்தி
முகத்திற்கு வேற்றானின் உருவை பொறுத்தி நடமாடும் நாடகத்திற்கு முடிவேயில்லை இங்கு!

ஆளுமை என்பதற்கு
பொருளை உன் சுயத்திலிருந்து பெற்றுக்கொள்!
இரவலுக்கு வாங்கி உனக்குள் உட்கார வைத்துவிடாதே!

உன் அழகை மெருகூட்ட ஒப்பனை செய்து பழகு!
உன் உருவை குழைத்து அழகை தேடாதே!

மாய்ந்து கொள்வதும் தற்கொலை தான்!
வேய்ந்து கொள்வதும் தற்கொலை தான்!
இதில் உருக்குலைவது ஒப்பனைக்குள் உள்நுழைக்கப்பட்ட
உன் தனித்திறமை தான்!….

எழுதுவது : ஆயிஷாஸித்தீக்கா
இலங்கை