ஊரே வியக்கும் உல்லாசப் பயணம்
ஆயிரம் வண்டி இருந்தாலும்
என் தந்தையின்
தள்ளுவண்டிக்கு ஈடாகுமா..
ஊரே வியக்கும்
ஒரு உல்லாசப் பயணம்
எத்தனை பிள்ளைக்கு கிடைக்கும்
இந்த ஆனந்தம்..
வண்டி தள்ளி
பள்ளிக்கு செல்ல வைப்பார்
கல்விக் கட்டணம் கட்டிவிட்டார்
பேருந்துக்கு கட்ட இல்லை..
பஞ்சு மெத்தை இல்லாவிட்டாலும்
பக்குவமாய் அமர
பாட்டி பெட்டி உள்ளது..
குழி,பள்ளம் வந்தாலும்
குலுங்கல் இல்லாமல்
குற்றாலம் போல் இருக்கிறது..
பெட்ரோல் செலவில்லை,
எனவே பெரிதாய் சிரமமும் இங்கில்லை..
பிஞ்சிக்கை பேனா பிடிக்க
பிரியமுடன் தள்ளுகிறார் தந்தை..
காலம், நேரம் பார்க்காமல்
கற்கும் இவன்
உயரவே, உறக்கமின்றி உழைக்கிறாரோ..
சோர்வில் கண்ணை தேய்த்தாலும்
குழந்தை உயர விழிக்கிறார்….
எழுதுவது : த.திவ்ய லட்சுமி
திருப்பத்தூர்