இந்தியக் குடிமக்கள் “ஷங்கன் விசா” இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் மாறி ஐக்கிய ராச்சியத்துக்குப் பயணிக்க முடியாது.
ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் ஒருவர் நுழைவதற்கு அந்தப் பிராந்தியங்களில் சுதந்திரமாகப் பயணிக்கும் “ஷங்கன் விசா” அவசியம். அதேபோலவே அந்த நாடுகள் ஒன்றில் விமானம் மாறி ஐக்கிய ராச்சியத்துக்குப் பறக்கும் இந்தியர்களுக்கும் அந்த விசா அவசியம் என்று ஐக்கிய ராச்சியம் அறிவித்திருக்கிறது.
பிரெக்சிட் மூலம் ஐக்கிய ராச்சியம் ஷங்கன் விசா ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிவிட்டது. அதனால் கடந்த வருட ஆரம்பத்திலிருந்தே இந்தக் கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது. கொரோனாக்கட்டுப்பாட்டுக்காலம் முடிந்து சமீப வாரங்களில் தனது சர்வதேச விமான சேவைகளை ஆரம்பித்திருக்கும் இந்தியர்களுக்கு இது ஒரு புதிய நிலைமையாகும்.
ஐக்கிய ராச்சிய அல்லது ஐரோப்பிய ஒன்றியக் குடியுரிமை இல்லாத இந்தியர்கள் ஐக்கிய ராச்சியத்துக்கு நேரடியாகப் பறக்கும்போது விமான நிறுவனங்கள் அவர்களிடம் ஐக்கிய ராச்சிய விசா இருக்கிறதா என்று மட்டுமே கவனிக்கிறது. அவர்களுடைய விமான ஐரோப்பிய ஒன்றிய நாடொன்றில் நின்று அதன் பின்னர் அங்கிருந்து ஐக்கிய ராச்சியத்துக்குச் செல்லுமானால் விமான நிறுவனங்கள் அவர்களிடம் ஷங்கன் விசா கட்டாயம் இருக்கவேண்டும் என்று அறிவித்திருக்கின்றன.
சாள்ஸ் ஜெ.போமன்