மருத்துவ உதவி பெற்றவர்களில் மிகக் குறைவான கொவிட் 19 நோயாளிகளே முழுக் குணமடைந்திருக்கிறார்கள்.
கொவிட் 19 ஆல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த கொவிட் 19 நோயாளிகளில் சிறு பங்கினரே முழுவதுமாகக் குணமடைந்திருக்கிறார்கள். அப்படியான நோயாளிகளில் 29 % பேரே ஒரு வருடத்தின் பின்பு முழுவதுமாகக் குணமடைந்திருக்கிறார்கள் என்று ஐக்கிய ராச்சியத்தில் நடாத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி குறிப்பிடுகிறது.
இந்தப் புள்ளிவிபரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 2,300 கொவிட் 19 நோயாளிகளைக் கவனித்ததன் மூலம் தெரியவந்திருக்கிறது. அந்த நோயாளிகளில் ஒரு வருடத்தின் பின்னரும் முழுக் குணமடையாமல் இருப்பவர்களில் பெண்களே பெரும்பாலானவர்கள். மருத்துவமனைக்குப் போகுமளவுக்குக் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களை விட 33 % அதிகளவில் பெண்கள் குணமடையவில்லை.
பெரும் சோர்வு, தசை நார்களில் பலவீனம், மூச்சுவிடக் கஷ்டப்படுதல், தூக்கமின்மை, உடலளவிலான செயற்பாடுகள் குறைதல் ஆகியவை குணமடையாத மருத்துவமனை கொவிட் 19 நோயாளிகளிடம் காணக்கூடியதாக இருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். அவர்களின் கணிப்புப்படி நீண்ட காலத்துக்கு மருத்துவ சேவை கொவிட் 19 நோயாளிகளின் தொடர் உபாதைகளைக் காணவேண்டியிருக்கும் என்பதாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்