அன்பு செய்
உற்றறியும் ஓரறிவுயிரைத் தொட்டும் வருடியும்
அன்புசெய்…
தன்னைத் தாக்கிய வழி தற்காத்துக் கொள்ளும்
ஈரறிவுயிரின் தடங்களை அன்புசெய்…
சுறுசுறுப்பினை நாளும் சூடிக்கொள்ளும்
மூவறிவுயிரின் முனைப்பினை அன்பு செய்…
கண்ணால் கண்டு
காட்சித் தெளிவு கொண்ட நாலறிவு உயிரின் நலனை நாளும் அன்புசெய் சொல்லையும் பொருளையும் கேட்டுத் தெளிந்து அறிவுரையின் அறிவினை அன்பு செய் அனைத்திலும் உயர்வான ஒப்புரவாளன் உன்னத பகுத்தறியும் பண்பாளர் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செய்
எழுதுவது : பெ.மாலையம்மாள் என்ற ராசாத்தி,
ஸ்ரீ வில்லிபுத்தூர்.