முயன்றால் முடியாததும் உண்டோ..

முயன்றால் முடியாததும் உண்டோ..!

எதையும் திட்டமிட்டுச் செய்தால்
தேடாமல் நம்மை வந்தடையும் !!!

எட்டு வைத்து முயற்சித்தால்
எட்டாக்கனியும் நம்மை வந்தடையும்!!!

பகுத்தறிவோடு பயிற்சி செய்தால்
பாதையே நம்மை வந்தடையும்!!!

நம்பிக்கையுடன் பயிற்சி செய்தால்
நன்மையே நம்மை வந்தடையும்!!!

தோல்விகண்டு துவண்டு விடாமல்
முயற்சித்தால் அதற்கான பலன் நம்மை வந்தடையும்!!!

முயற்சியோடு பயிற்சியும் இருந்தால்
முழுமையான பலன் நம்மை வந்தடையும்!!!

வெற்றி நம்முடைய இலக்காக இருந்தால்
வரும் தோல்விகளும்
நம்முடைய
நம்பிக்கையிடம் தோற்றுவிடும்!!!

எழுதுவது : ச.மஞ்சுளாதேவி, கரூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *