பின்லாந்து, சுவீடன் ஆகியவற்றின் நாட்டோ- விண்ணப்பத்தை அமெரிக்கப் பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டது.
அமெரிக்க செனட்சபையின் 100 அங்கத்தவர்களில் 95 பேர் பின்லாந்தும், சுவீடனும் முன்வைத்திருக்கும் நாட்டோ அமைப்பு விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டனர். ஒரேயொரு ரிபப்ளிகன் கட்சி செனட்டர் எதிராக வாக்களிக்க அதே கட்சியைச் சேர்ந்த இன்னொருவர் முடிவெடுக்காமல் ஒதுங்கிக்கொண்டார்.
பின்லாந்து, சுவீடன் நாடுகளின் பாதுகாப்பு ஆர்வமும் நீண்டகால தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவை பற்றி பாராளுமன்றத்தில் குறிப்பிடப்பட்டன. ரஷ்யா தனது பிராந்தியத்தில் செய்துவரும் எல்லைமீறல்களை எதிர்கொண்டு பால்டிக் நாடுகளின் பாதுகாப்பையும் பலப்படுத்த சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் நாட்டோ அமைப்பில் இணைவது வரவேற்கத்தக்கது என்று சிலாகிக்கப்பட்டது.
செனட் சபைக்கு முன்னரே ஜூலை மாத நடுப்பகுதியில் அவ்விரு நாடுகளின் நாட்டோ அங்கத்துவ விண்ணப்பம் அமெரிக்காவின் பாராளுமன்றத்தின் இரண்டாவது சபையிலும் எடுக்கப்பட்டது. அங்கே 400 அங்கத்தவர்களில் 18 பேர் மட்டுமே எதிராக வாக்களித்திருந்தார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்