டுவிட்டரின் லோகோவில் மாற்றம்..!

இன்றைய கால கட்டத்தில் சமூக ஊடகங்கள் இல்லாமல் மக்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு சமூக ஊடகங்கள் முன்னிலை வகிக்கின்றன.

இந்த வகையில் சமூக ஊடகமான டுவீட்டரை xஎன மாற்ற திட்டமிட்டிருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.இவ் அறிவித்தலின் மூலம் டுவிட்டரின் லோகோவான நீல நிற குருவிக்கு விடை கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

இந்த லோகோ மாற்றமானது வர்த்தக ரீதியாக வருமானம் ஈட்டக்கூடியதாக இருக்கும் என எலன் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

இதில் ஓடியோ ,வீடியோ,மெசேஜ்,பணம் செலுத்துதல் என அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *