அதிக மழையினால் டெங்கு நோய் பரவும் அபாயம்..!
ஒரு பக்கம் கடுமையான வறட்சி நிலவுகிறது ஒரு பக்கம் கடுமையான மழை பொழிகிறது. இவை இரண்டுக்குமிடையில் உலக வாழ் மக்கள் பல நோய்களுக்கு உள்ளாகிவருகின்றனர்.
இதில் பல நாடுகள் பல நோய்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்த வகையில்
பங்களாதேஷ் முழுவதும் டெங்கு காய்ச்சல் மிக தீவிரமாக பரவி வருகிறதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை பங்களாதேஷில் பருவமழைக் காலமாக கருதப்படுகிறது.
நடப்பாண்டில் ஜனவரி முதல் இதுவரை அந்த நாட்டில் 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் 303 பேர் தீவிர காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை மட்டும் 2,000க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மருத்துவமனைகளில் பலர் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில் நோய் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
டெங்கு நோயினை தடுக்க சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டி பலராலும் விழிப்புனர் செயற் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடதக்கது.