வரம் தரும் வரலக்ஷ்மி விரதம்..!
இன்றைய தினம் உலகளவிய ரீதியில் அனைத்து இந்து மக்களாலும் வரலக்ஷ்மி விரதம் அனுஷ்டிக்கப்பட்டுவருகிறது.ஆடி மாதம் என்றாலே கடவுள் வழிப்பாட்டிற்க்கு சிறப்பான மாதம். இதில் ஆடிப்பூரம்,ஆடி அமாவாசை,ஆடி 18,ஆடி ச்செவ்வாய் , என பலவாறாக இறை வழிப்பாட்டிற்க்கு சிறப்பான நாட்களாக காணப்படுகிறது.
அதிலும் லக்ஷ்மியின் வரவேண்டி அனுஷ்டிக்கபடும் வரலக்ஷ்மி விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்து. விரதம் அனுஷ்த்தித்து,பூஜை செய்து மஞ்சள் காப்பினை கையில் அணிந்துக்கொள்வது விசேட அம்சமாகும் .மனதிற்கு பிடித்த கணவன் அமையவேண்டும் என கன்னி பெண்களும்,கணவன் மகிழ்ச்சிகரமாகவும் நீண்ட ஆயுளுடனும் இருக்க வேண்டும் என சுமங்கலி பெண்களும்,அனைத்து செல்வங்களும் கிடைக்க வேண்டும் என அனைவராலும் இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இலங்கை,இந்தியா,நேபாளம் என இந்துக்கள் வாழும் நாடுகளில் சிறப்பாக இவ்விரதம்அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடதக்கது.