இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

இன்றைய தினம் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்தோனேசியாவின் தலாவத் தீவு பகுதியில் இன்று அதிகாலை இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இது ரிச்டர் அளவில் 6.7ஆக பதிவாகியிருந்ததாக தேசிய நிலநடுக்க ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.இந்நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை பப்புவா நியுகினியின் வடகடலோர பகுதியிலும் இன்று அதிகாலை 3.16மணியளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.இது ரிச்டர் அளவில் 6.5ஆக பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *