போகிப்பண்டிகை…!

போகிப்பண்டிகை

தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

புகைமிகு பாரதம் இனியும் வேண்டாம்
பகைதரும் நட்பு துளியும் வேண்டாம்
வாகை சூட இலவசம் வேண்டாம்
வகைமிகு உணவுகள் வயிற்றுக்கு வேண்டாம்

தீவிரவாதம் தீயில் பொசுங்கிட வேண்டும்
தீண்டாமைத் தீயை அணைத்திட வேண்டும்
அன்பென்னும் அங்குசம் எடுத்திட வேண்டும்
வன்மிகு யானையை அடக்கிட வேண்டும்.

உஷா வரதராஜன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *