காதலை காதலியுங்கள்..!
👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦
ஈன்றவர்
நல் அன்பில்
கரு வித்து…
பாட்டன் பாட்டி
அரவணைப்பில்
ஆளாகி…
குரு அவர்
அருளாள்
திருவாகி…
உடன் பிறப்பின்
பாசத்தில்
கலந்தாடி…
நட்பின்
நேசத்தில்
நடைப்பழகி…
காலப் பெரும்
வழியை
கடந்திங்கே…
கடலலை போல
கடினங்களை…
கடந்து வந்த
வாழ்வு தனை…
தொடர்ந்து
நடவு செய்திடவே…
இறையென
அன்பு
வேண்டுமல்லோ…
கட்டணம்
ஏதும் இல்லாது…
கடவிதழ்
ஏதும் இல்லாது…
நல் சொற்றொடர்
கொண்டு உறவாடி…
மகிழ்ச்சிப் பொங்க
வாழ்த்திடுவோம்…
இனிய
அன்பர்கள்
தின வாழ்த்துகள்…
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️