சென்னை இன்று மீண்டும் தோற்றது | பஞ்சாப் வெற்றி

IPL போட்டித்தொடரின் இன்றைய போட்டியில் சென்னை அணி , பஞ்சாப் அணியிடம் 7 விக்கெட்டுக்களால் தோற்றது.

49 வது போட்டியாக இன்று சென்னை சிதம்பரம் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியிலேயே இந்த வெற்றியை பஞ்சாப் அணி பெற்றுள்ளது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன்படி துடுப்பெடுத்தாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 162 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
ஆகக்கூடுதலாக அணித்தலைவர் Ruturaj Gaikwad , 52 பந்துகளில் 68 ஓட்டங்களை எடுத்தார்.


163 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 13 பந்துகள் மீதமிருக்கும் போதே 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

ஆட்டத்தில் ஆகக்கூடுதலாக Jonny Bairstow, 30 பந்துகளில் 46 ஓட்டங்களைக்குவித்தார்.

ஆட்டத்தின் ஆட்டநாயகனாக பஞ்சாப் அணியின் சார்பில் பந்துவீச்சில் அசத்திய Harpreet Brar தெரிவு செய்யப்பட்டார்.


நான்கு ஓவர்கள் பந்து வீசிய Harpreet , வெறும் 17 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *