கொவிட் 19 தடுப்பூசி- சமூக நம்பிக்கையீனங்கள் அகற்றப்படுவதே எதிர்காலத்துக்கு நல்லது – வைத்தியர் புவிநாதன்
2020 ம் ஆண்டில் மருத்துவத்திற்கும் அதனூடாக உலகமெங்கும் பெரும் சவாலாக இருந்த, கோவிட் 19 ஐ கட்டுப்படுத்துவதற்காக , ஐக்கிய இராச்சியத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட தடுப்பூசி தொடர்பாக சமூக நம்பிக்கையீனங்கள் அகற்றப்பட வேண்டும். அதுவே எதிர்காலத்துக்கு சிறப்பாகும் என மருத்துவர் திரு புவிநாதன் வெற்றிநடை நேரலைக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
தடுப்பூசியானது மக்களுக்கு கட்டம் கட்டமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கைகள் எடுப்பதை அவதானிக்கக்கூடியதாக இருப்பதாக குறிப்பிட்ட அவர் ஒரு சிலருக்கு ஒவ்வாமை தாக்கங்கள் இருப்பதை செய்திகளில் முன்னிலைப்படுத்தப்படுவதால் மக்களுக்கு அது தொடர்பாக கூடிய விழிப்புணர்வை வழங்கவேண்டிய பொறுப்பும் உள்ளதாக மேலும் குறிப்பிட்டார்.
மேலும் தடுப்பூசி குறித்து மக்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டிய அவசியம் குறித்து மருத்துவர் திரு புவிநாதன் வெற்றிநடை நேரலைக்கு வழங்கிய நேர்காணலை இங்கே பார்க்கலாம்.