ஒரு நிலக்கரிச் சுரங்கத்தை மீண்டும் திறக்க அனுமதி கொடுத்த பிரிட்டிஷ் அரசு தனது முடிவை மாற்றிக்கொண்டது.
வரவிருக்கும் இலையுதிர்காலத்தில் பிரிட்டனில் நடக்கவிருக்கும் ஐ.நா-சபையின் காலநிலை பற்றிய மாநாடு நிலக்கரிச் சுரங்கத்தை அனுமதிப்பதில் முக்கிய பங்கு பெறுகிறது என்று கணிக்கப்படுகிறது. சுற்றுப்புற சூழலைப் பெரிசும் மாசுபடுத்தும் நிலக்கரிச் சுரங்கத்தை வேலை வாய்ப்புக்களைக் காரணம் காட்டித் திறக்கும் ஒரு வளமான நாடு மற்ற நாடுகளுக்குக் காலநிலையைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் போதிக்க முடியாது என்பதை பிரிட்டிஷ் அரசு புரிந்துகொண்டிருக்கிறது.
பிரிட்டனின் வடமேற்கு மாகாணம் தான் வைட்ஹேவனில் நிலக்கரிச் சுரங்கத்தைத் திறக்க அனுமதி கொடுத்ததாகச் சொல்லித் தப்பிக்கொள்ள முயன்ற பிரிட்டிஷ் அரசுக்கு உள்நாட்டு, சர்வதேச சுற்றுப்புற சூழல் அமைப்புக்களின் விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
பிரிட்டனின் வீட்டு வசதி மற்றும் மாகாணங்களுக்கான அமைச்சர் ரொபெர்ட் ஜெர்னிக் குறிப்பிட்ட மாகாணத் தலைமைக்குக் கடிதம் எழுதியதாகத் தெரிகிறது. குறிப்பிட்ட நிலக்கரிச் சுரங்கத்தினால் ஏற்படக்கூடிய காலநிலைப் பாதிப்புக்கள் பற்றிய புதிய விபரங்கள் தெரியவந்திருப்பதால், அச்சுரங்கத்தை அனுமதிப்பது பற்றிய ஆராய்வொன்றை பிரிட்டிஷ் அரசு நடத்தவேண்டியிருக்கும் என்று அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்