மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரத்தில் ஒரு வாரம் பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டிருக்கிறது.
நாக்பூர் இந்தியாவில் கொவிட் 19 ஆல் இறந்தவர்களில் ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. தற்போது பெருந்தொற்று வேகமாக நகரில் பரவி வருகிறது, மும்பாயையும் விட அதிக எண்ணிக்கையில். எனவே, உணவு மற்றும் அவசிய தேவைகளுக்கான கடைகள் தவிர மற்றைய சேவைகள் ஒரு வாரத்துக்கு முடக்கப்படுவதாக நகரின் ஆரோக்கிய சேவை அதிகாரம் தெரிவித்திருக்க்கிறது.
கடந்த நாட்களில் ஏற்பட்டிருக்கும் தொற்றுக்களையும் சேர்த்து மஹாராஷ்டிராவில் 2.2 பேர் கொவிட் 19 ஆல் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இறந்தவர்கள் தொகை 53,000 ஆகும்.
பொதுவாக இந்தியாவெங்குமே கொவிட் 19 சமீப நாட்களில் தொற்றுவது அதிகமாகியிருக்கிறது. ஞாயிறன்று மட்டுமே சுமார் 25,000 அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் இத்தொகை கடந்த மூன்று மாதங்களின் மிகப் பெரும் தொகையென்று குறிப்பிடப்படுகிறது.
நாட்டில் கொவிட் 19 தொற்றுக்களை கவனிப்பது, கட்டுப்பாடுகளைப் பேணுவதில் அதிகாரிகளின் கவனக்குறைவு, தொற்றுச் சோதனைகள் குறைந்திருப்பது மற்றும் மக்களிடையே கொரோனாத் தொற்றுக்கள் பற்றிய விழிப்புணர்வு குறைந்திருப்பது போன்றவையே மீண்டும் தொற்றுக்கள் அதிகமாகுவதற்குக் காரணமென்று மக்கள் ஆரோக்கிய சேவையினர் குறிப்பிடுகிறார்கள்.
அதேசமயம், இந்தியா உலகிலேயே அதிகமான அளவில் தடுப்பு மருந்துகளைத் தயாரித்து வருகிறது. 71 நாடுகளுக்கு நன்கொடையாகவும், உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் கோவக்ஸ் திட்டத்தின் மூலமும் மில்லியன்களவில் தடுப்பு மருந்துகளை அனுப்பி வருகிறது.
இந்தியாவின் மருத்துவ சேவையாளர்களுக்கு இதுவரை சுமார் 29 மில்லியன் தடுப்பு மருந்துகள் போடப்பட்டிருக்கின்றன. அரச மருத்துவ மனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவ சேவையில் ரூ 250 க்கும் தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்